பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாளில் ரூ.8.35 கோடிக்கு மதுபான விற்பனை

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை அன்று, ரூ.8.35 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 71 டாஸ்மாக் கடைகள், கிராமப்புறங்களில் 112 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 183 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடிக்கு மதுபான விற்பனை இருக்கும். பண்டிகை நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மதுபான விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

இதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.13-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ரூ.9.17 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. இது, சராசரி மதுபான விற்பனையை விட ரூ.5.17 கோடி அதிகம்.

அதேவேளையில், தீபாவளி நாளான நேற்று (நவ. 14) திருச்சி மாவட்டத்தில் ரூ.8.35 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. இது, சராசரி மதுபான விற்பனையைவிட ரூ.4.35 கோடி அதிகமாக இருப்பினும், தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையைவிட ரூ.82 லட்சம் குறைவு.

SCROLL FOR NEXT