தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக கூடுதலாக 191 உயர் சிறப்பு மருத்துவர்களை 3 மாதம் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்ற தமிழக அரசு நியமித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 500-க்கும் மேற்பட்ட முதுகலை படித்த மருத்துவர்கள் 37 மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.