சமயமூர்த்தி, தர்மேந்திர யாதவ், குமார் ஜெயந்த். 
தமிழகம்

போக்குவரத்துக் கழகச் செயலர் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 

செய்திப்பிரிவு

தமிழகப் போக்குவரத்துக் கழகச் செயலர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:

1. கரூவூலக் கணக்குத்துறை ஆணையர் சமயமூர்த்தி மாற்றப்பட்டு, போக்குவரத்துக் கழகச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. போக்குவரத்துக் கழகச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளிநாட்டு மனிதவள மேம்பாட்டுக் கழக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வெளிநாட்டு மனிதவள மேம்பாட்டுக் கழக ஆணையராகப் பதவி வகிக்கும் குமார் ஜெயந்த், கரூவூலக் கணக்குத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT