தமிழகம்

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனங்களை ரத்து செய்யக்கோரி ஆளுனர், முதல்வருக்கு கடிதம்

கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2018 மற்றும் 2020-ல் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களை ரத்து செய்யக்கோரி தமிழக ஆளுனர், முதல்வருக்கு மதுரை வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ராமசுப்பிரமணியன், தமிழக ஆளுனர், முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2018 மற்றும் 2020-ல் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மற்றும் நியமனம் அதற்கான விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறவில்லை.

இதனால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2018, 2020-ல் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அரசு வழக்கறிஞர்கள் தேர்வுக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியமனம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்களையும் பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT