சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கும், அதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொலை யானதற்கும் தொடர்புள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன்எம்எல்ஏ நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது:
மங்கலம் தொகுதியில் 5 சிறுமிகள் வாத்து மேய்க்ககொத்தடிமைகளாக பணியில்அமர்த்தப்பட்டு இரண்டு ஆண்டு களுக்கு மேலாக தொடர்ந்து 10க்கும்மேற்பட்டவர்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு வந்துள்ளனர். இதில் 13 வயது நிரம்பியசிறுமி மூன்று மாத கர்ப்பமாக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அள வில் மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் செயல் இது.
ஆட்சியர் அலட்சியம்
மத்திய கொத்தடிமை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர் மாவட்ட ஆட்சியர். கட்டிடத் தொழில், கரும்பு வெட்டுதல், வாத்துமேய்த்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து கொத்த டிமை தொழிலாளிகளாக மாற்றி வைக்கப்பட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து தடுக்கவில்லை.
வெளி மாநில பெண் பாலியல்வன்கொடுமைக்கு ஆளானால், அவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தற்போது தமிழ் பேசும் பழங்குடியின பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை. யாரும் இல்லையா?.
முதலில் கொத்தடிமைத் தனத்தை கண்டறிந்து, தடுத்து நிறுத்தாதது மாவட்ட நிர்வாகத்தின் தவறாகும். குழந்தைகள் நல வாரியம் விசாரணையில் பேரில் தான் இக்கொடூர சம்பவம் வெளி வந்துள்ளது.
முதல்வர் மவுனம்
முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து இதுவரை பேசாததற்கு என்ன காரணம்? 5 சிறுமிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை கருத் தில் கொண்டு, தலா ரூ. 50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
அந்த சிறுமிகளில் ஒருவரின் தாய் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதற்கும் இந்த கொடூர சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக் கிறதா என விசாரணை நடத்த வேண்டும். இதன் பேரில் ஒரு உயர்மட்ட குழு விசாரணைக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும். இந்தக் குற்றத்தை தொடக்கத்திலேயே தடுக்க தவறிய உயர் அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட குழு விசாரணைக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும்.