தமிழகம்

சென்னை பல்கலை. தொலை தூரக்கல்வி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொலைதூரக் கல்வி நிறுவனம் டிசம்பர் மாதத்தில் நடத்தவுள்ள எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (ஐ.டி. மற்றும் தகவல் பாதுகாப்பு) பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளுக்கு ஆன்லைனில் (>www.ideunom.ac.in) விண்ணப்பிப்பதற்கும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குமான கடைசி தேதி இம்மாதம் 16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அபராத கட்டணத்துடன் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் உரிய தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT