கிளாம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள். 
தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம்: அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்தபடி, கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்துப் பிரித்து இயக்கப்படவுள்ளன. அந்த இடங்களில் அரசு போக்குவரத்துக் கழகஅதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டுவருகிறனர்.

அந்த வகையில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூருக்கு அருகில்கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் இடத்தில் போக்குவரத்துக் கழகஅதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி ரூ.400 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தில் சென்னை புறநகர் மக்கள் விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து,வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்தே பயணம் செய்ய வசதியாக பயணிகளுக்கான சிறப்புஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இதேபோல், தனியார் பேருந்துகளும் இந்தப் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வந்து செல்வதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளியை முன்னிட்டு இப்பேருந்துநிறுத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அடிப்படை வசதிகளும்செய்யப்பட உள்ளன என்றார்.

SCROLL FOR NEXT