விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
தமிழகம்

சி.வி.சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றுகிறேன் விரைவில் மக்களை நேரில் சந்திக்கிறேன்: விழுப்புரம் மாவட்ட திமுக பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

கரோனா காலக்கட்டத்தில் அரசின் சட்டங்களை மதித்து காணொலி வாயிலாக கூட்டம் நடத்துகிறோம். சி.வி. சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றும் வகையில் விரைவில் நான் மக்களை நேரில் சந்திக்க வருவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘தமிழகம் மீட்போம்‘ என்ற தலைப்பில் விழுப்புரம் மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 31 இடங்களிலும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 20 இடங்களிலும் நடைபெற்றன.

கூட்டத்திற்கு தலைமையேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியது:

சாமானியர்களுக்காக ஆட்சிநடத்தியவர் கருணாநிதி மட்டும்தான். ஆதிதிராவிடர் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையை உருவாக்கி சமூக நீதியைஅமல்படுத்தினார். பட்டியல் இனத் தவருக்கு 18 சதவீத இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். வன்னிய சமுதாய மக்களை இணைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவரும் கருணாநிதிதான்.

என்ன செய்தார் பழனிசாமி?

முதல்வர் பழனிசாமிக்கு எந்த சமுதாயத்தினர் மீதும் அக்கறை கிடையாது. டெண்டரில் வரும் கமிஷன் மீதுதான் அவருக்கு அக்கறை. விவசாயி என்று சொல்லிவேடமிட்டு வருகிறார். உண்மை யான விவசாயி என்றால் விவசாயி களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்திருக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை கூட வழங்காத இந்த சட்டத்தை விவசாயிகள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், இலவச மின்சார சட்ட திருத்தத்தையும் பழனிசாமி ஏன் எதிர்க்கவில்லை?

பழனிசாமியும், சி.வி.சண்முக மும் விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன கொண்டு வந்துள்ளனர்? எங்கள் ஆட்சியில் செய்த சாதனை களை நீண்ட நேரம் பட்டியலிட்டு சொல்வோம். உங்களால் அது முடி யுமா? நீட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் போனது உள்ளிட்ட பல விஷயங்களில் சி.வி. சண்முகத்தின் துரோகங்களை பட்டியல் போட முடியும். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலட்சியமே சாத்தான்குளம் சம்பவமாகும். காவல்துறையை விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட்டை மிரட்டியது காவல் துறை.

‘நாட்டில் நடப்பதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை’ என்கிறார் சி.வி.சண்முகம். தமிழ கத்தில் நான் போகாத இடம் கிடையாது; செல்லாத கிராமம் கிடையாது. இந்த கரோனா காலக்கட்டத் தில் அரசின் சட்டங்களை மதித்துகாணொலி வாயிலாக கூட்டம் நடத்துகிறோம். சி.வி. சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றும் வகை யில் விரைவில் நான் மக்களை நேரில் சந்திக்க வருவேன்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளதாக சி.வி.சண் முகம் சொல்கிறார். ஊழலுக்காக உரிமையை விலைபேசி விற்றது தான் இவர்கள் கூட்டம். தமிழகத் தின், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போராடிய வருகிற ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT