தமிழகம்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்களில் சிங்கப்பூர், துபாயிலிருந்து மதுரைக்கு 412 தொழிலாளர்கள் வருகை

எஸ்.ஸ்ரீனிவாசகன்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்களில் சிங்கப்பூர், துபாயிலிருந்து மதுரைக்கு 412 தொழிலாளர்கள் வருகை தந்துள்ளனர்.

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கரோணா ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளில் சிக்கொய இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துவரும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வந்திருக்கிறது.

தற்போது மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு நாட்களில் துபாயிலிருந்து விமான மூலம் 340 தொழிலாளர்களும், சிங்கப்பூரிலிருந்து விமானமூலம் 72 தொழிலாளர்களும் தனித்தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

மதுரையிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் மதுரையிலிருந்து 58 பேர் துபாய் சென்றுள்ளனர்.
.

SCROLL FOR NEXT