தமிழகம்

காகித ஆலை அபகரிப்பு வழக்கு: திருப்பூர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. ஆஜர்

செய்திப்பிரிவு

கோவையிலுள்ள காகித ஆலை அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை சேப் பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் சரத் சக்ஸேனா ஆகியோர் திருப்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். கடந்த 2011-ம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஆலை உரிமை யாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார். கிரயம் செய்யும் முன்பு பிரச் சினை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களிடம் பேச்சு நடத்தியுள் ளனர். ஜெ.அன்பழகன் எம்எல்ஏ., ஹன்ஸ்ராஜ் சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் சீனிவாசன் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜெ.அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, அவரது மனைவி ஜமீலா கிங்ஸ்லி ஆகியோர் நேற்று ஆஜராகினர். குற்றப்பத்திரிகை நகல் 4 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில், வரும் 20-ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஜெ.அன் பழகன் கூறும்போது, ‘என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வார். இந்த அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும்; ஒடுக்க வேண்டும் என்று செயல்படுகிறது’ என்றார்.

SCROLL FOR NEXT