தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பம் விற்பனை இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி, 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் ஒரு அரசு பல் மருத்து வக் கல்லூரியும் 18 இடங்களில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி களும் உள்ளன. இந்த கல்லூரி களில் 2014-15ம் கல்வி ஆண்டுக் கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று (புதன்கிழமை) தொடங்கிவரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்ப விற்பனை நடக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

SCROLL FOR NEXT