தமிழகம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழப்பைத் தடுக்க கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுமா?

செய்திப்பிரிவு

ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் ஆம்புலனஸ் வழங்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டில் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இங்கு திருவண் ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை யில் விபத்தில் காயமடையும் நபர் களும், சிகிச்சைக்காக இங்கு அனு மதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அனுமதிக்கப்படும் நபர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லை. மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், ஆம்புலன்ஸ் தட்டுபாடு ஏற்பட்டு சரியான நேரத்துக்கு மேல் சிகிச்சை அளிக்க முடியாமல், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், உயிரி ழப்புகளை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு, கூடுதல் ஆம்புலன்ஸ்கள் வழங்க வேண்டும் என, நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்

இதுகுறித்து, நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறியதாவது: தலையில் படுகாயம் அடையும் நபர்களுக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தால் மட்டுமே, காயத்தின் நிலை அறிந்து சிகிச்சை அளிக் கும் நிலை உள்ளதால், மேல்சிகிச் சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்று கின்றனர். ஆனால், சென்னை சென்ற ஆம்புலன்ஸ் எப்போது திரும்பி வரும் என, காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், சரியான நேரத்திற்கு மேல் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: செங்கல் பட்டு அரசு மருத்துவமனை யில், விபத்தினால் தலைகாயத்துடன் நாள்தோறும் சராசரியாக 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்கள். மேலும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தலை யில் காயமடைந்த நபர்களுக்கு, முதலுதவி அளித்து இங்கு அனுப் பும் நிலை உள்ளது. ஆனால், தலை காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கான, அதிநவீன மருத்துவ வசதிகள் இங்கு இல்லா ததால், இவ்வாறான பாதிப்புள்ள நபர்களை சென்னை அரசு மருத் துவமனைக்கு மாற்றும் நிலை ஏற்படுகிறது. இதுதவிர மற்ற நோய் தாக்குதல் தொடர்பாக, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களும், சென்னை மருத் துவமனைக்கு மாற்றப்படும் நிலை உள்ளது. அதனால், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் கூறியதாவது: செங்கல் பட்டிலிருந்து ஒருநோயாளியை அழைத்துகொண்டு, சென்னையில் அனுமதித்து மீண்டும் திரும்பி வர, குறைந்தபட்சம் 5 மணி நேர மாகிறது. சில நேரங்களில் போக்கு வரத்து நெரிசலால், கூடுதலான நேர செலவும் ஏற்படுகிறது. இத னால், நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 5 முறை மட்டுமே சென்று திரும்ப முடிகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை, அவசர அழைப்புக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்படுத்த முடி யாது. இதனால், ஏழை நோயாளி களுக்கு அரசின் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது அரிதான ஒன் றாக உள்ளது. இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) சுப்புராஜ் கூறியதாவது: மருத்துவமனைக்கு கூடுதலாக 6 ஆம்புலன்ஸ் பெறுவதற்காக, திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர் பார்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT