தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் 969 பேருக்கு ரூ.5 கோடியில் இலவச ஸ்கூட்டர்: முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

கால்கள் பாதிக்கப்பட்ட 969 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் செலவில் இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, பெட்ரோலில் இயங்கும் இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் செலவில் 969 ஸ்கூட்டர்களை வழங்கும் விதமாக 5 பேருக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சாவிகளை வழங்கினார்.

முன்னதாக 2011 முதல் 2013 வரை ரூ.9 கோடியே 50 லட்சம் செலவில் 1,755 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT