தமிழகம்

கோத்தகிரியில் அதிமுக நிறுவன நாள் விழா: எம்ஜிஆர் படத்துக்கு ஜெயலலிதா மரியாதை

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடந்த அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழாவில், எம்ஜிஆர் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழா, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை அருகே நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோடநாட்டில் இருந்து கார் மூலமாக வந்த ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள், மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

விழா மேடைக்கு வந்த ஜெய லலிதாவை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதய குமார், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப் பினர் தம்பிதுரை, மாவட்டச் செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன் ஆகியோர் வரவேற்றனர்.

சிலையின் கீழ் பகுதி யில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஜெய லலிதா ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து விழா சிறப்பு மலரை அவர் வெளியிட, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டார். பின்னர், கூடியிருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு பணி நியமன உத்தரவை வழங்கினார்.

21 அமைச்சர்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். விழா மேடை அமைந்துள்ள டானிங்டன் பகுதிக்கு காலை 11:30 மணிக்கு வந்த முதல்வர், 11.37-க்கு கோடநாடு திரும்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT