தமிழகம்

ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆன்லைன் வர்த்தகம் புற்றுநோய் போல் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகிறது. அதைத் தடுக்க அரசு உடனடியாக ஆன் லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் வலியுறுத்திஉள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ரயில்வே சாலை வியாபாரிகள் சங்கத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவைத் தலைவர் த.வெள்ளையன் பங்கேற்று புதிய சங்க நிர்வாகிகளை அறிவித்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் பேசும்போது ‘ஆன்லைன் வர்த்தகம் சிறிது சிறிதாக புற்றுநோய் போல்வளர்ந்து வருகிறது. அனைத்துவகை ஆன்லைன் வணிகங்களையும் அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மேலும் வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தலாம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 11 மணிவரை நீட்டிக்க அரசு உத்தரவிட வேண்டும்’ என்றார். இவ்விழாவில் இச்சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT