தமிழகம்

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

செய்திப்பிரிவு

சென்னையில் மீன்வளத் துறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவின் வேல் யாத்திரை, கூட்டணி உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:

பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை வேறுபாடு இருக்கும். அதே நேரம்,கூட்டணி தொடர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு ஒரேமுடிவில்தான் உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதே திமுக குடும்ப அரசியலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்காகத்தான். எனவே, திமுகதலைவர் தற்போது தொடங்கியுள்ள பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள். அவர் எவ்வளவுதான் வேஷம் போட்டாலும் தமிழக மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT