திருச்சி ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, புதிய 6 வகையான இனிப்பு வகைகள் மற்றும் 3 வகையான காம்போ பேக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று (நவ. 6) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"ஆவின் தயாரிப்புப் பொருட்கள் சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இதன் காரணமாக, தீபாவளி பண்டிகைக்கு திருச்சி ஆவின் நிறுவனத்தில் என்னென்ன சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கும். எனவே, கடந்தாண்டைப்போல் நிகழாண்டும் திருச்சி ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
பேரீச்சை கோவா, மைசூர்பா, முந்திரி கேக், பேரீச்சை கேக், தேங்காய் கேக், ஸ்பெசல் முந்திரி அல்வா ஆகியவை சிறப்பு இனிப்புகளாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளன.
மேலும், உறவினர்கள், நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிக்கும் வகையில் இனிப்புகள் மற்றும் நெய் அடங்கிய 3 வகையான காம்போ பேக், ரூ.320 முதல் ரூ.750 வரை விற்பனைக்குத் தயாராக உள்ளன.
ரூ.325 காம்போ பேக்கில் தலா 250 கிராம் பேரீச்சை கோவா, மைசூர்பா மற்றும் 250 மி.லி. நெய் ஆகியவை இருக்கும்.
ரூ.465 காம்போ பேக்கில் தலா 250 கிராம் பேரீச்சை கோவா, மைசூர்பா மற்றும் 500 மி.லி. நெய் ஆகியவை இருக்கும்.
ரூ.750 காம்போ பேக்கில் தலா 250 கிராம் பேரீச்சை கோவா, பால் கேக், பேரிச்சை பால் கேக், தேங்காய் பால் கேக், முந்திரி அல்வா மற்றும் 200 மி.லி. நெய், 200 கிராம் பாதாம் மிக்ஸ் ஆகியவை இருக்கும்.
எனவே, பொதுமக்கள் திருச்சி ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை சிறப்பு ஆர்டர் செய்ய 99423 57209, 98940 23466, 99943 14559 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.