தமிழகம்

அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள்: டிச. 2-ல் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்

செய்திப்பிரிவு

தமிழக அரசு தொடர்ந்துள்ள 3 அவதூறு வழக்குகளில் வரும் டிச.2 அன்று நேரில் ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

கடந்த ஜன.27 அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல கடந்த ஜூன் 5 அன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் சில கருத்துகளை பதிவிட்டதாகவும் தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசியதாகவும் முரசொலிபத்திரிகையில் செய்தி வெளியானது.

இந்த 3 விவகாரங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 3 அவதூறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நேற்று சென்னை எம்பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளில் வரும் டிச.2 அன்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT