தமிழகம்

தீபாவளி ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை: போன் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான ஆவின், தீபாவளியையொட்டி பால் சார்ந்த இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் ஆவின் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பால் மற்றும் பால் பொருட் களை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கி வரும் ஆவின்நிறுவனம், கடந்த 40 ஆண்டுக ளுக்கும் மேலாக பால் விற்பனை யில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

தற்போது தீபாவளியை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான ஸ்டப்டு டிரை ஜாமுன் (250 கி) -ரூ. 190, நட்டி மில்க் கேக் (250 கி) - ரூ.190, ஸ்டப்டு மோதி பாக் (250 கி) -ரூ.170, காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.225, பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) -ரூ.165 என விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் நெய் முறுக்குடன் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் தொகுப்பு ரூ.375க்கு விற்பனைக்கு உள்ளது.

இவை அனைத்தும் சுகாதார மான முறையில் ஆவினின் நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும்.

81488 38237 அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உங்களுக்கு தேவையான ஆர்டர்களை தெரிவித்தால் டோர் டெலிவரி செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT