மதுரை பெரியார் பஸ் நிலையக் கட்டுமானப் பணிகள் தாமதம் ஆவதால், தீபாவளிப் பண்டிகை நேரமான தற்போது அப்பகுதியில் தினமும் போக்குவரத்து ஸ்தம் பித்து வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பரிதவிக்கும் நிலை ஏற் பட்டு வருகிறது.
`ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முத லில் பெரியார் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, அங்கு ரூ. 150 கோடி செலவில் 6 அடுக்கு அதிநவீன பஸ் நிலையம் அமைக் கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நிலையம் கட்ட டெண்டர் விட்ட பிறகு மிக வும் தாமதமாகவே பணிகள் தொடங்கின. இடையில் கரோனா ஊரடங்கால் பணிகள் முற்றிலும் முடங்கின. அதன்பிறகு கடந்த 3 மாதங்களாக பணிகள் நடக்கின்றன. ஆனால், தற்போது வரை பணிகள் முடிந்தபாடில்லை. ஆரம்பத்தில் கடந்த ஜூன் மாதமே பஸ் நிலையம் திறக்க இருப் பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதன் பிறகு, கரோனா ஊரடங்கால் பணிகள் பாதிக்கப்பட்டதால் நவம்பரில் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.தற்போது அதுவும் நடக்காததால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ் நிலையம் இல்லாததால் பஸ்களை ஓட்டுநர்கள் ஆங் காங்கே சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வரு கின்றனர். அதனால், பெரியார் பஸ் நிலைய சாலைகளை வாகன ஓட்டிகள் எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. மதுரையில் சாதாரண நாட்களிலேயே காலை முதல் இரவு வரை போக்குவரத்து ஸ்தம்பிக்கும். தற்போது தீபாவளிப் பண்டிகை என்பதால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அதிகமான மக்கள், ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள், பலசரக்குப் பொருட்கள் வாங்க மதுரை மீனாட்சியம்மன் கோயி லைச் சுற்றியுள்ள கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.
அதனால், பெரியார் பஸ் நிலையப் பகுதிகளில் போக்கு வரத்து மேலும் ஸ்தம்பிக்கிறது. அதனால், தீபாவளி முடியும் வரை அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.