திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் பகுதியில் குட்கா பான்மசாலா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 65 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் சவுராஷ்டிரா காலனி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அன்சாரி (வயது 46 ) இவர் தனது பெட்டி கடையில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா ஆகிய பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளார்.
குட்கா மற்றும் பான் மசாலா மொத்தமாக விற்பனை செய்வது குறித்து பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் பெருங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அன்சாரியைக் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து 65 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.