செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. இந்த சேமிப்புத் திட்டம் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 11 லட்சம் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. இதன் அறிமுக சலுகையாக 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளை இணைத்து பொதுமக்கள் பயனடையலாம்.