தமிழகம்

12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: பாலியல் தொந்தரவு காரணமா?- உறவினர்கள் சாலை மறியல்; தனியார் பள்ளி ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்தி ரன். இவரது மகள் கவுசல்யா (17). காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த தேவனூரில் உள்ள பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி, செய்யூரில் உள்ள தனியார் பள்ளி யில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பள் ளிக்கு புறப்பட்ட அவர் சிறிது நேரத் தில் திடீரென வீட்டில் உள்ள அறை யில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த அறை யில் கவுசல்யா எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதத்தை உறவினர்கள் கைப்பற்றினர்.

அதில், பள்ளியில் விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக தனது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் கூறி இருப்பதாவது: நான் சொல்வது அனைத்தும் பைபிள் மேல் சத்தியமாக உண்மை. என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரமேஷ். அவர் நல்லவர் கிடையாது. அதை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை. ஆனால் சொல்லித் தான் ஆக வேண்டும். அவர் என்னிடம் தவறாக நடந்தார்.

நான் சொல்வதை நம்பவில்லை எனில் நீங்கள் மற்ற மாணவிகளிடம் ஆசிரியர் ரமேஷ் பற்றி கேளுங்கள் என்று அதில் எழுதப்பட்டு இருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், கவுசல்யாவின் சடலத்துடன், செய்யூர்-மதுராந்த கம் சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த செய்யூர் போலீஸார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமரசம் செய்ய முயன்றனர். அதனால் போலீஸார் மற்றும் கிராம மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மதுராந்தகம் டிஎஸ்பி சிவசங்க ரன் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தனி யார் பள்ளி ஆசிரியர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT