திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனை யின்போது செல்போன் செயலியை (மொபைல் ஆப்) பயன்படுத்தி ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு, மணல், மது, கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்வதற்காக எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தர வின்பேரில் டி.எஸ்.பி. பால்சுதர் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக் டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறையில் நேற்று முன்தினம் நடத்திய சோதனை யின்போது லாட்டரி சீட்டுகளை அச்ச டித்து மொத்த விற்பனை செய்து வந்த 5 வியாபாரிகளை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, சமயபுரம் பகுதியில் லாட்டரி விற்ப னையைத் தடுக்கும் வகையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். தெப்பக்குளம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோத னையின்போது செல்போன் செயலியை பயன்படுத்தி, ஆன் லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சேகர்(43), மாகாளிக்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வாசு(42) ஆகியோரைப் பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடமிருந்து 2 செல்போன்கள், லாட்டரி விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.720 ரொக்கம், லாட்டரி சீட்டுகளை வாங்கிச் சென்றவர்களின் விவரங் கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.
இந்த இருவரிடமும் நடத்தப் பட்ட விசாரணையில் ஆன்லை னில் லாட்டரி விற்பனை செய்யும் கும்பல் திருச்சி மாநகரம் மற் றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இருப்பது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்யும் முயற்சியில் தனிப் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கேரள லாட்டரி சீட்டுகளுக்கென தனி செல்போன் செயலி உள்ளது. வியாபாரிகள் அனைவரும் அந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, அதில் தங்களுக்கு ஒதுக்கப்படும் வரிசை எண்கள் உடைய லாட்டரி சீட்டுகளை உள்ளூரில் விற்பனை செய்கின்றனர். மேலும் அந்த எண்களை பெற்றுக் கொள் பவர்களின் விவரங்களையும் குறித்துக் கொள்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளை களில் அந்த செல்போன் செயலியில் லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதை வியாபாரிகள் தெரிந்துகொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களும் நேரடியாக இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதும், இந்த வகையிலான ஆன்லைன் லாட்டரி திருச்சியில் பரவலாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள் ளோம்.
தற்போது சிக்கியுள்ள 2 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சசி என்பவர் இக்கும்பலுக்கான தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார் என்பதை அறிந்து, அவரைத் தேடி வருகிறோம். மாவட்டத்தில் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும் இதுபோன்ற லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தெரியவந்துள்ளதால் அங்கும் சோதனையிட முடிவு செய்துள் ளோம் என்றனர்.