தமிழுக்கும், தமிழிசைக்கும் அரும்பணியாற்றியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறியுள்ளார்.
டாக்டர் ராஜா சர் அண்ணா மலை செட்டியாரின் 135வது பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற் றது. விழாவுக்கு தலைமை தாங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசியதாவது:
தமிழுக்காகவும், தமிழிசைக் காகவும் அரும்பணியாற்றியவர் ராஜா சர் அண்ணாமலை செட்டி யார். 1942-ல் தேவகோட்டையில் தமிழிசை பள்ளி தொடங்கிட உறுதுணையாக இருந்தார். தமிழிசையைப் பரப்ப வேண்டும் என்கிற நோக்கில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழிசை பாடத்துறையை உருவாக்கினார். அன்றைய நாட்களில் கச்சேரிகளில் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டன. அதை மாற்றி முழுவதும் தமிழிசையாகப் பாடும் நிகழ்ச்சிகளை நடத்தியவர். நகரத்தார் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணாமலை செட்டியார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழிசைப் பணி யாற்றியதற்காக கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணனுக்கு ரூ.3 லட்சத்துடன் கூடிய நினைவுநாள் பரிசு வழங்கப்பட்டது. எம்.ஏ.எம். ராமசாமி, எழுத்தாளர் சோம. வள்ளியப்பன். முன்னாள் நீதிபதி பு.இரா கோகுலகிருஷ்ணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், செயலாளர் ஏஆர்.ராமசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.