இந்திர தனுஷ் தடுப்பூசி 2-ம் கட்ட முகாம் சென்னை உட்பட 19 மாவட் டங்களில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்கு வான் இருமல், ரனஜன்னி, தட் டம்மை, நிமோனியா மற்றும் ஜப் பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பூசி திட்டம் அறி விக்கப்பட்டது. முதல்கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 1.83 லட்சம் குழந்தைகள், 28 ஆயிரம் கர்ப்பிணிகள் பயனடைந்தனர்.
இந்நிலையில் 2-ம் கட்ட முகாம்கள் சென்னை, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், நாகர்கோவில், நாகப் பட்டினம், பெரம்பலூர், புதுக் கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திரு வண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், விழுப் புரம் ஆகிய19 மாவட்டங்களில் இன்று முதல் 14-ம் தேதி வரை நடக்கவுள்ளன. அதைத் தொடர்ந்து நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங் களில் 2-வது வாரத்தில் முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாம்களை சிறப்பாக நடத்துவது தொடர்பான விழிப் புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத் தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் கே.குழந் தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) எ.சந்திரநாதன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீன்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற் றனர்.
கருத்தரங்கில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது: இரண்டாம் கட்டமாக இந்திரதனுஷ் தடுப் பூசி முகாம் நடைபெறும்19 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தடுப் பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை செயல்படும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தை கள், விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப் படும். சுமார் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.