நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத் தில் சரண் அடைய வந்த யுவராஜ், தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க டீ-சர்ட், லுங்கியுடன் வந்து சரண் அடைந்தார். யுவராஜ் சரண் அடைந்த கடைசி நிமிடம் வரை போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது.
நாமக்கல் சிபிசிஐடி அலுவல கத்தில் நேற்று (11-ம் தேதி) காலை 10.30 மணிக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ் சரணடைவதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். இந்த பரபரப்புக்கு இடையில் காலை 10 மணியளவில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி ராஜன் உள்ளிட்ட போலீஸார் சில ஆவணங்களுடன் அலுவலகத்தில் இருந்து புறப் பட்டுச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரும் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, யுவராஜ் வேறு இடத்தில் சரண் அடையப்போவதாக வந்த தகவல் அடிப்படையில் போலீஸார் புறப்பட்டுச் சென்றதாக தெரிவித் தனர்.
இருந்தபோதும் யுவராஜின் ஆதரவாளர்கள் சிபிசிஐடி அலுவல கம் முன்பே திரண்டிருந்தனர். இந்த பரபரப்புக்கு இடையில் காலை 10.55 மணியளவில் யுவ ராஜ் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
போலீஸாரின் பார்வையை திசை திருப்பவும், எவ்வித பிரச் சினையுமின்றி சரணடையவே யுவராஜ் தரப்பில் இதுபோல் தகவலை பரப்பியதாக பின்னர் தெரியவந்தது.
மேலும், யுவராஜ் காலை 10.30 மணிக்கு முன்னதாகவே நாமக்கல் சிபிசிஐடி அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வந்தி ருக்க வேண்டும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
சரணடைய வந்த யுவராஜ், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அலு வலகம் வந்த பின்னர் தொப்பி, கருப்புக் கண்ணாடி மற்றும் கருப்பு நிற டீ-சர்ட், லுங்கி அணிந்தபடி வந்தார்.
அவர் வந்தவுடன், அவரை அடையாளம் கண்ட ஆதரவாளர் கள் கோஷம் எழுப்பியபடி அவரை தூக்கினர். அதன்பின்னர் தொப்பி உள்ளிட்டவற்றை அவர் கழற்றி வீசினார். மேலும், வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.