சிவகுரு பிரபாகரன் 
தமிழகம்

அரசின் தகவல்களை ட்விட்டரில் மட்டுமே வெளியிடும் அதிகாரிகள்: தகவல் தெரியாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட மக்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர், தங்கள் துறை சார்ந்த தகவல்களை ட்விட்டரில் மட்டுமே பதிவிடுவதால் கிராம மக்களுக்குத் தகவல்கள் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையராக கிராந்திகுமார்பதி ஐ.ஏ.எஸ். சில வாரங்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். கரோனா விழிப்புணர்வு விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக தற்போது பழநி மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப்கார், இழுவை ரயில் ஆகி யவை இயக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் படிப்பாதையில் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற் படுகிறது.

இதற்குத் தீர்வுகாணும் விதமாக கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி வெளியிட்ட ‘ட்விட்டர்’ பதிவில், பழநி மலைக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் விரைவாக, தடையின்றி தரிசனம் செய்ய ஏதுவாக கோயில் நிர்வாகத்தின் 18004259925 மற்றும் 04545-240293 என்ற எண்களைத் தொடர்புகொண்டு தங்களது வருகையை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் சார் ஆட்சியராக உள்ள சிவகுரு பிரபாகரன் தனது ட்விட்டர் பதி வில், வெள்ளிதோறும் ஒரு பழங்குடி கிராமம் என்ற அடிப் படையில், கொடைக்கானலில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களையும் அரசின் அனைத்துத் துறை சார்பாக அந்தந்த கிராமங்களிலேயே சந்திக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாங்கள் வெளியிடும் தகவல்களை ட்விட்டர் பதிவுடன், மக்களைச் சென்றடையும் வகையில் தக வல்களை வெளியிட்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், இல்லாவிட்டால் இவர்களின் திட்டங்கள் அதுசார்ந்த தகவல்கள் தங்களுக்கு தெரியாமலேயே போய்விடும் என்கின்றனர் பொது மக்கள். கிராமங்கள் நிறைந்த மாவட் டத்தில் ட்விட்டர் கணக்கு வைத் துள்ளோர் மிகக்குறைவே.

இதனால் உயர் அதிகாரிகளின் அறிவிப்புகள் மக்களுக்கு தெரி வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்விட்டருடன், மக்களை எளிதில் சென்றடையும் ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கொடைக்கானல் வருவாய்த் துறையினர் கூறு கையில், "பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அரசின் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் அதை உறுதிப்படுத்துவோம், என்றனர்.

SCROLL FOR NEXT