அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்துடன் ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
‘தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடு வேன்’ என்று கடந்த 2017 டிசம் பர் 31-ம் தேதி அறிவித்த ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை. கடந்த மார்ச் 12-ம் தேதி செய்தி யாளர்களை சந்தித்த அவர், ‘‘நான் முதல்வராக மாட்டேன். வேறு ஒருவரை முதல்வராக முன் னிறுத்துவோம்’’ என்று அறி வித்தார். அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் தொடங்க வில்லை.
ரசிகர்கள் நெருக்குதல்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று அவருக்கு ரசிகர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் 29-ம் தேதி ரஜினி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.
இது ரஜினி ரசிகர்கள், ஆதர வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அர சியலுக்கு வரமாட்டார் என்ற கருத்துகளும் பரவி வருகின்றன.
இந்நிலையில், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவ ரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ரஜினியின் பெய ரில் வெளியான கடிதம் குறித் தும் அதற்கு ரஜினி அளித்த பதில் குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது.
அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டுமானால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக குருமூர்த்தி வலியுறுத்தி வருகிறார். நேற்றைய சந்திப்பின்போதும் இதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘கடந்த 1996-ல் தனிக் கட்சி தொடங்கியிருந்தால் நீங்கள் முதல்வராகி இருப்பீர்கள். தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறும் மாறியிருக்கும். அப்போது செய்த வரலாற்று தவறை இப்போதும் செய்ய வேண்டாம். கட்சி தொடங்குங்கள் . அதற்கு உடல் நிலை ஒத்துழைக்காவிட்டால் திமுகவுக்கு எதிரான அணிக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று ரஜினி யிடம் குருமூர்த்தி வலியுறுத்திய தாக கூறப்படுகிறது.