தமிழகம்

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கட்சி பாஜக: மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து

செய்திப்பிரிவு

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இதை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சி பிளவு அரசியல் செய்கிறது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கட்சியாக பாஜக உள்ளது.

காங்கயத்தில் பேசும்போது, விவசாய நிலங்கள் வழியே உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றுவழி திட்டம் இல்லாதபோது, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆய்வு செய்து உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர், இதில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்றே கூறினேன்.

இருப்பினும் இவ்விவகாரத்தில் விவசாயிகளின் ஒரு சில கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். நானும் விவசாயி என்பதால் ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை. எனக்காக அறிவித்த ரூ.1 கோடி அவர்களது நலனுக்காக பயன்பட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT