திருக்குழுக்குன்றம் கடம்பாடி கிராமம் திருவதீஸ்வரர் சிவன் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம். 
தமிழகம்

திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கடம்பாடியில் உள்ள மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கடம்பாடியில் உள்ள திருவதீஸ்வரர் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. கடம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளசிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சில கோயில்களில் நேற்று முன்தினம் இரவும், சில கோயில்களில் நேற்று இரவும்அன்னாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து சிவனை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT