வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர்கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை முன் னிட்டு, தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் ஆங்காங்கே உருவாகும் மணல் திட்டுக்களால் தண்ணீர் செல்லும் பாதை தடைபடுகிறது. எனவே,அப்பகுதியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் திட்டுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எண்ணூர் வள்ளுவர் நகர் கே.எச்.சாலை பகுதி மற்றும் அசோக் லேலண்ட்பின்புறம் உள்ள பகுதிகளில் அப்புறப்படுத்தாமல் இருந்த தரைப்பாலங்கள் இடித்து தரைமட்டமாக்கும் பணிகளும், எண்ணூர் பக்கிங்ஹாம் கால்வாயில் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுநீர் கலவையை அகற்றி, கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
இப்பணிகளை வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக விரைந்து முடித்து, உபரி மழைநீர் செல்ல வசதியாக அனைத்துப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அனல்மின் நிலையஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.