கோப்புப் படம் 
தமிழகம்

வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் பேர் மொட்டை அடித்து பங்கேற்க முடிவு

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நவ.26,27 தேதிகளில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் விவசாயிகள் மொட்டை அடித்து பங்கேற்பது என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பி.அய்யாக் கண்ணு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.சி.பழனிவேல் முன்னிலை வகித் தார். கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், நவம்பர் 26,27 தேதிகளில் 500 விவசாய சங்கங் கள் பங்கேற்கும் பேரணியில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் விவசாயிகள் மொட்டை அடித்துக் கொண்டு பங்கேற்க உள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, சிறு, குறு விவசாயிகள் போன்று பெரிய விவசாயிகளுக் கும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். கோதாவரி, காவிரி, குண்டாறு, மேல்வைப்பாறு இணைப்புத் திட்டம் செயல் படுத் தப்படும், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லாத கடன் வழங் கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் அவரது வீட்டின் முன்பு காத்தி ருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT