தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார் டி.அன்பழகன்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியராக டி.அன்பழகன் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, மதுரை ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மதுரை ஆட்சியராக ஓராண்டை அவர் நிறைவு செய்யவிருந்த நிலையில் பணியிட மாறுதல் உத்தரவு வந்தது.

டி.ஜி.வினய்க்குப் பதிலாக கரூர் ஆட்சியராக இருந்த டி.அன்பழகன் மதுரை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை முறைப்படி ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டி.அன்பழகன் 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தவர்.

1993-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்க பொறியியல் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார்.

2001-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் துணை ஆட்சியராகத் தேர்வானார். தேர்வில் முதலிடமும் பெற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை ஆட்சியர் பயிற்சி முடித்த பிறகு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார்.

இந்தியா ஆட்சிப் பணியாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு சென்னை சுற்று வட்டச்சாலை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மூலிகை தாவரங்கள் மேம்பாட்டுக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் எல்காட் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT