சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினமும் 50 முதல் 55 குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் விஜயாவிடம் கேட்டபோது, “மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் என மொத்தம் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம்சுகப் பிரசவம், 40 சதவீதம் சிசேரியன். 4 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று இருந்தது. அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தாய்மார்களும், குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்” என்று தெரிவித்தார்.