புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயியான இவரது வீட்டுக்கு அருகே கல்லணைக் கால்வாய் செல்கிறது. இந்நிலையில், தனது வீட்டுக்கு மின்வாரியத்திடம் இருந்து மின் இணைப்பு பெறுவதற்காக நாகுடி பிரிவு கல்லணைக் கால்வாய் உதவிப் பொறியாளர் தென்னரசிடம் தடையின்மைச் சான்று கேட்டு அண்மையில் விண்ணப்பித்துள்ளார். அதற்குத் தென்னரசு லஞ்சமாக ரூ.5,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் பிரபாகரன் புகார் அளித்துள்ளார். அவர்களது ஆலோசனையின்படி நாகுடி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் இன்று (அக். 28) பிரபாகரன் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.5,000-ஐ தென்னரசு வாங்கியபோது அங்கு மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.