தமிழகம்

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னுக்கு அக்.30-ல் முதல்வர் வருகை: மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

தேவர் குருபூஜையையொட்டி, அக்.30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குரு பூஜை விழா அக்.28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று காலை யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. இன்று முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவர்.

அரசு விழா

தேவர் குரு பூஜை அக்.30-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அன்று காலை 8.45 மணிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். இந்நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செய்து வருகிறார்.

தேவர் குரு பூஜையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இன்று முதல் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்.பி. இ.கார்த்திக் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT