தமிழகம்

பாஜகவினர் போலி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்: கார்த்தி சிதம்பரம் 

இ.ஜெகநாதன்

"திருமாவளவன் கூறிய கருத்துகளைத் திரித்துக் கூறி, பாஜகவினர் போலி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்" என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜையையொட்டி, அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தடை உத்தரவை மீறி போராட்டம் செய்யச் செல்வோரை கைது செய்வது என்பது சாதாரண நடைமுறை தான். குஷ்பு நடிகை என்பதால் அவரது கைதை பெரிது படுத்துகின்றனர்.

திருமாவளவன் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. மனுநூலில் கூறப்பட்ட விஷயங்களைத் தான் எடுத்துக் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்குப் பிறகு அதை திரித்துக் கூறி பாஜகவினர் போலி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் அதைத் தெரிந்து போராடுகிறார்களா? தெரியாமல் போராடுகிறார்களா என்பதே தெரியவில்லை.

நான் மனு நூலை படித்ததில்லை. சம்ஸ்கிருதம் தெரிந்த பாஜவினர் தான் அந்த நூலில் என்ன கூறியுள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அந்த நூல் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா? மேலும் அந்த நூலை பாஜவினர் ஏற்று கொள்கிறார்களா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் அதிமுக அரசு தொடர்ந்து போராட வேண்டும். வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT