தமிழகம்

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க சாதகமான சூழல்; அக்.29-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் இருந்து கிழக்கு திசைக் காற்று வீசத் தொடங்கி யுள்ளது. அதனால், தமிழகத் தில் 28-ம் தேதி (நாளை) வட கிழக்கு பருவமழை தொடங்கு வதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் 29-ம் தேதி அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக வாய்ப் புள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

வடஇந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று விலகி வருகிறது. அதனால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. 28-ம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதி களிலும் இருந்து தென்மேற்கு பருவக் காற்று விலகிவிடும். வங்கக் கடலில் தற்போது மேற்கு திசைக் காற்று வீசுவது குறைந்து கிழக்கு திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகம் அருகே தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இத்தகைய மாற்றங்கள் தமி ழகத்தில் 28-ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கு வதற்கான சாதகமான சூழ லாகப் பார்க்கப்படுகிறது. அன்றே கடலோர மாவட்டங் களில் மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 29-ம் தேதி மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற் றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதி களில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT