தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்து பாராட்டினார்.
தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் பொன் மாரியப்பன் என்பவருடன் காணொலியில் பேசினார். உரையாடலின் இடைஇடையே தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் அங்கேயே நூலகம் ஒன்றையும் வைத்தார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் புத்தகத்தை எடுத்துப்படித்தால் சலுகையும் வழங்குகிறார். இவர் குறித்த செய்தி ஏற்கெனவே சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில், “நண்பர் பொன்.மாரியப்பன் தனது கடையின் ஒரு பாகத்தை நூலகத்துக்கு அர்ப்பணித்துள்ளார். இது ஒரு வித்தியாசமான உத்வேகம் அளிக்கும் முயற்சி” என்று பிரதமர் மோடி பாராட்டினார்.