கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர் களை விரட்டியடிக்க இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படு வதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடராமல் இருக்க வலியுறுத்தி கடந்த வாரங்களில் தூத்துக்குடி மீனவர்கள் துறைமுகம் முற்றுகை, நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம், ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம் எனப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 500-க் கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந் தனர். அப்போது இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாகக் கூறி ராமேசுவரம் விசைப் படகு மீனவர் களை அந்நாட்டு கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது சேவியர் என்பவருக்குச் சொந்த மான படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. இதில் விசைப்படகு சேதம் அடைந்தது. மேலும் 20-க் கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை கடற்படையினர் அறுத்து கடலில் மூழ்கடித்தனர். இதனால் மீனவர்கள் உயிருக்குப் பயந்து மீன்பிடிப்பதை கைவிட்டு கரைக்குத் திரும்பினர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 87 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 39 படகுகளும் இலங்கையில் உள்ளன. மீனவர் கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு 87 மீனவர்கள், 39 படகுகளை உட னடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதியதில் சேதமடைந்த சேவியரின் விசைப்படகு.