மகாத்மா காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைகள், உருவப் படங்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி யின் 147-வது பிறந்த நாள் நாடு முழுவதும் நேற்று கொண் டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் காந்தி சிலையின் கீழே அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த அவரது உருவப் படத் துக்கு ஆளுநர் கே.ரோசய்யா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தி லிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்டம் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காந்தி உருவப் படத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
மெரினாவில் காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தமாகா சார்பில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கிண்டியில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு, மத நல் லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு வலி யுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர் கள் மெரினா காந்தி சிலையில் இருந்து கிண்டி காந்தி மண்டபம் வரை சைக்கிள் பேரணி சென்றனர்.
காமராஜருக்கு அஞ்சலி
தமிழக முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் காமராஜரின் நினைவு நாள் நேற்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி, கிண்டி யில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தமாகா சார்பில் ஜி.கே.வாசன், பீட்டர் அல்போன்ஸ், சமக தலைவர் ஆர்.சரத்குமார், துணைத் தலைவர் ஏ.நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் காந்தி, காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி உருவப் படங்களுக்கு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.