மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழகத்தின் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் கள், தங்கள் பாரம்பரிய மீன் பிடி பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் போது, இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த மாதம் 22- ம் தேதி முதல் இம்மாதம் 14-ம் தேதி வரை, பல்வேறு சம்பவங் களில் 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அந்நாட்டு சிறைகளில் அடைத்துள்ளது.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங் களை எழுதினார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் 86 பேரையும் வரும் 28-ம் தேதி இலங்கை அரசு விடுவிப்பதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது.
இந்நிலையில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பி துரை தலைமையில், அதிமுக எம்.பி.க்கள் 48 பேர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக மீனவர்களை விடுவிப்பது மற்றும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,520 கோடி ஒதுக்கவும் கோரி மனு அளித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து நிருபர்க ளிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:
தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பேசுவ தாக அமைச்சர் உறுதி அளித்துள் ளார். முதல்கட்டமாக இலங்கை தூதருடன் இதுதொடர்பாக விவாதிக்கப்படும். பின்னர், இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் சிறிசேனவிடம் எடுத்துரைப் பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட் டோம். இதுதொடர்பாக, இலங்கை அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை பேசி வருவதாக அமைச்சர் கூறினார். கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் சட்டத்துக்கு புறம்பானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.