திருநெல்வேலி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை படைத்த வர்களுக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசு வழங்கினார்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தில் 2018-2019 ம் ஆண்டில் சிறுசேமிப்பு வசூலில், மாவட்ட அளவில் சாதனை புரிந்த பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முகவர்கள் முத்துமணிதேவி, கணேசன் ஆகியோருக்கு கேடயம் மற்றும் தலா ரூ.3 ஆயிரத்துக்கான தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முகவர்கள் விசாலாட்சி, வெங்கட்ராமதுரை ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரத்துக்கான தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது. தென்காசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் முகவர் கமலா, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அசோகன் ஆகியோருக்கு 3-ம் பரிசாக ரூ.1000-க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது.