திருநெல்வேலி மாநகராட்சியில் வரிவசூல் மையங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவைத்தொகை அதிக அளவில் நிலுவை உள்ளதால், சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகையினை சிரமமின்றி செலுத்திட ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சியின் வரிவசூல் மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றது.
மேலும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் செயல்படும்.
எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தி முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.