காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காமாட்சி அம்மன். 
தமிழகம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று துர்காஷ்டமி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான துர்காஷ்டமி நிகழ்ச்சி இன்று (அக். 23) நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் பலர் கோயிலுக்கு வந்து காமாட்சி அம்மனை வணங்குவதுடன் நவராத்திரி மண்டபத்திலும் வழிபாடு செய்வர். இந்த ஆண்டும் வழக்கம்போல் கொலு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொலு மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த விழா குறித்து கோயில் முக்கிய அர்ச்சகர்களில் ஒருவரான ஷியாமா சாஸ்திரி கூறும்போது, “காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவாராத்திரி விழா நடைபெற்று வரும் நிலையில், கரோனாவால் நவராத்திரி மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அம்பாளை மட்டும் காலை 8 மணி முதல் 10.30 மணிவரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணிவரையும் தரிசனம் செய்யலாம்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான துர்காஷ்டமி நாளை (இன்று) நடைபெறுகிறது. அடுத்த நாள் நவமி, அதற்கு அடுத்தநாள் விஜயதசமி. இந்த 3 நாட்களும் அம்பாள் வழிபாட்டுக்கு விசேஷமான நாட்கள்” என்றார்.

SCROLL FOR NEXT