இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் கு.பூசப்பன், உடல்நலக்குறைவால் நேற்று காலமானர். கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூசப்பன், நேற்று காலை காலமானார்.
நசியனூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நேற்று மாலை ஊர்வலமாக அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு, மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய கு.பூசப்பன் (79), இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் தலைமையில் இந்து முன்னணியில் இணைந்து, கடந்த 34 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்து முன்னணியில் ஒன்றிய பொறுப்பாளர், மாவட்டத் தலைவர் பதவிகளை வகித்துள்ள அவர், கடைசியாக மாநில துணைத்தலைவர் பதவி வகித்து வந்தார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் , மாநில இணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ் , மாநில செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.