தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹுவுடன் ஆணையர் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த காலகட்டத்திலும் கரோனா தொற்று பரவல் தொடரும் பட்சத்தில், தற்போது பிஹாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழக தேர்தலின் போதும் எடுக்கப்படும் என தேர்தல்ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இதுதவிர, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. இதில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பணிகள் குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா பாதிப்புதொடர்ந்தால், ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும் கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் தமிழக வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்கான பணிகளில் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT