தமிழகம்

திருவள்ளூரில் திருடுபோன 140 செல்போன்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் திருடுபோய் கண்டுபிடிக் கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 140 செல்போன்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி அரவிந்தன் ஒப்படைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருடுபோய் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி அரவிந்தன் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடப்பாண்டில் செல்போன்கள் திருடுபோனது தொடர்பாக 631 புகார்கள் பெறப்பட்டன. மேலும், செல்போன்கள் வழிப்பறி தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 140 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வழிப்பறி செய்யப்பட்ட 37 செல்போன்களில் 33 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இதுவரை 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மலிவான விலையில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்கள், ரசீதுகள் எதுவும் இல்லாமல் செல்போன்களை வாங்க வேண்டாம். மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரவிந்தன் கூறினார்.

SCROLL FOR NEXT