தமிழகம்

மதுரை விமான நிலையப் பாதுகாப்புப் படை முகாமில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவில் உள்ள மதுரை விமான நிலைய மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை முகாமில் பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீனத் துருப்புகளுடன் சண்டையிட்டபோது, சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், காவல் துறையில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் விமான நிலைய சிஐஎஸ்எஃப் முகாமில், பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

இதில் துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் உதவி கமாண்டன்ட் சனிஷ்க் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். பணியின்போது உயிர் நீத்த ஈரண்ண நாயக வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார், அலேக் நிரஞ்சன் சிங், குல்தீப் ஆகிய மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT